53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கிருமி நாசினியுடன் களமிறங்கிய நடிகை ரோஜா! பயந்து ஒதுங்கிய சுகாதார பணியாளர்களுக்கு சரியான பாடம்!
கொரோனா பயத்தால் கிருமி நாசினியை தெளிக்க தயங்கி நின்ற சுகாதார பணியாளர்களுக்கு தக்க பாடம் கற்பித்துள்ளார் நடிகை மற்றும் எம்எல்ஏவான ரோஜா.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நகரி தொகுதியில் உள்ள வடமாலை பகுதியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுகாதார பணிகளை மேற்பார்வையிட எம்எல்ஏ மற்றும் நடிகையுமான ரோஜா அந்த பகுதிக்கு சென்றார். அப்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்காமல் தயங்கி நின்றதை கண்டு ரோஜா மிகவும் கோபமடைந்தார்.
உடனே பாதுகாப்பு கவச உடைகளை தனக்கு அணிவிக்குமாறு கட்டளையிட்ட ரோஜா கிருமி நாசினியினை அவரே சாலை மற்றும் சுவர்களில் அடிக்க ஆரம்பித்தார். ரோஜாவின் இந்த துணிச்சலான செயலை கண்டு அனைவரும் ஆச்சர்யபட்டனர்.
மேலும் அதுவரை தயங்கி நின்ற சுகாதார பணியாளர்களும் தங்கள் பணியினை தொடர ஆரம்பித்தனர். ரோஜாவின் இந்த செயல் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.