திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வயாகரா மாதிரி.! சர்ச்சையை கிளப்பிய பிரபல கவர்ச்சி நடிகை.!
பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து ராக்கி சாவந்த் தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார்.
ராக்கி சாவந்த் அடிக்கடி எதாவது கூறி சர்ச்சையில் சிக்கக்கூடியவர். இந்த நிலையில் அவர் தற்போது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகராவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில், நான் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டேன். ஆனால் பின்பு இரு நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை.
என் இதயம் மிகவும் வேகமாக துடித்தது. நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். என் முகமெல்லாம் வீங்கி விட்டது. கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றது அல்ல. 60 வயதுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். மேலும் இந்த கொரோனா பூஸ்டர் தடுப்பூசி டோஸ் ஷிலாஜித் அல்லது வயாகராவை போல உள்ளது என கூறியுள்ளார்.
அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவர் தடுப்பூசி குறித்த தவறான கருத்தை பரப்புகிறார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.