வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
70 மணி நேர வேலை.. அதானி சொன்ன அந்த கருத்து.. உங்களுக்கு ஒத்து வருமா.?!
ஒரு வாரத்திற்கு இந்திய இளைஞர்கள் 70 மணி நேரம் நிச்சயம் வேலை செய்ய வேண்டும் என இன்போசிஸ் நிறுவன நாராயணமூர்த்தி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அது பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வரை விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு தரப்பினர், 70 மணி நேரம் வாரத்திற்கு வேலை செய்யும் பொழுது தனிப்பட்ட வாழ்க்கை முற்றிலுமாக பாதித்துவிடும் என்று கூறுகின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் 70 மணி நேரம் வேலை செய்வது நமது வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் என்று தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல தொழிலதிபராக இருக்கும் அதானி, இது பற்றி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, " ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கை மற்றும் வேலை நிச்சயம் வேறுபடும். ஒரு சிலருக்கு வீட்டில் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் இருந்தாலே போதும்.
இதையும் படிங்க: மனைவியின் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை; டெல்லியில் அடுத்த சோகம்.!
ஆனால், சிலருக்கு 8 மணி நேரம் வீட்டில், இருப்பது அவசியம். எப்படி இருந்தாலும் உங்களுக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை நீங்கள் செய்யும் பொழுது தான் உங்கள் வாழ்க்கையும் வேலையும் நிம்மதியாக இருக்கும். உங்கள் கருத்தை என்மீதோ, என் கருத்தை உங்கள் மீதோ இதில் திணிக்க முடியாது. வேலை மற்றும் வீடு இது இரண்டை தவிர வேறு உலகம் கிடையாது."என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புத்தாண்டில் கொடூரம்.. தாய், 4 சகோதரிகள் கொடூர கொலை.. மகன் பரபரப்பு செயல்.!