அந்த மனசுதான் கடவுள்.. ஒடிசா இரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றார் கெளதம் அதானி.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் 3 இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் பலியாகினர். 900 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய அளவில் மட்டுல்லாது உலகளவிலும் ஒடிசா விபத்து கவனிக்கப்பட்டு, உலகளாவிய தலைவர்களும் தங்களின் இரங்கலை பதிவு செய்தனர். இந்த நிலையில், இரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான கல்விச்செலவை அதானி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதிக்கப்பட்ட மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு பலம் வழங்குவது, அவர்களின் குழந்தைகளுக்கான எதிர்காலத்தை வழங்குவதே நமது பொறுப்பு. பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அதானி ஏற்றுக்கொள்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.