#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆசை ஆசையாக நண்பர்களுக்கு பிரியாணி ஆர்டர் செய்த வாலிபர்... ஒருவாய் உள்ளே போனதும் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
தெலுங்கானா மாநிலம், பஞ்சகுட்டா அடுத்த சந்திராயன் குட்டாவை சேர்ந்தவர் லியாகத் அலி(30). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களை அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றுக்கு பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பிரியாணி ஒரு வாய் உள்ளே சென்றதுமே அதன் ருசி சரியில்லை என ஓட்டல் ஊழியரிடம் லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் ஊழியர்கள் ஒன்று சேர்த்து கடையை அடைத்து விட்டு கடைக்குள் லியாகத் அலி மற்றும் அவரது நண்பர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கதவை திறந்து அவர்களை தூக்கி வீசியுள்ளனர்.
அதில் லியாகத் அலி படுகாயம் அடையவே அவரை மீட்டு அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் லியாகத் அலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டல் ஊழியர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.