#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் ஒரு துயரச் சம்பவம்... குழி மந்தி பிரியாணி சாப்பிட்டு மற்றொரு இளம்பெண் உயிரிழப்பு... கேரளாவில் பரபரப்பு!!
கேரளாவில் ரேஷ்மி என்ற இளம் செவிலியர் மந்தி பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு இளம்பெண் ஒருவர் குழி மந்தி பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த 31 ஆம் தேதி ரோமன்சியா என்ற உணவகத்திலிருந்து குழி மந்தி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக கர்நாடாக மாநிலம் மங்களூரில் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.