மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Watch: பிடித்து செல்லப்பட்ட நாய்களை விடுவித்த இளைஞர்; குவியும் பாராட்டுகளும்., கண்டனங்களும்.!
நாய்கள் நன்றி உள்ளவை எனினும், சில நேரங்களில் அவைகளாலும் தீங்குகள் நேருகின்றன.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருக்கிறது.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை வாகனம் வைத்து பிடித்து வருகின்றனர்.
उत्तर प्रदेश: आगरा नगर निगम की गाड़ी कुत्तों को लेकर जा रही थीं। बाईक सवार युवक ने दरवाज़ा खोला। कई कुत्ते फरार हो गए।
— Report1Bharat (@Report1Bharat) January 27, 2024
आप बताओ। युवक ने सही किया या गलत?#UttarPradesh #Agra #UPNews #Report1Bharat pic.twitter.com/cQs0M57RAJ
நாய்கள் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கருத்தடை சிகிச்சைக்கு பின் விடுவிக்கப்படும்.
இந்நிலையில், இவ்வாறாக ஆக்ரா மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து வாகனத்தில் அழைத்து சென்ற நாயினை, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பூட்டினை திறந்து விட்டார்.
இதனால் நிலைமையை உணர்ந்த நாய்கள் நொடியில் சுதாரித்து வாகனத்தில் இருந்து தப்பி குதித்து ஓடியது. இந்த காட்சிகள் வெளியாகி வரவேற்பு/எதிர்ப்பு கருத்துக்களை பெற்று வருகிறது.