ரூ.9 இலட்சத்திற்கு பூனை வாங்கி காதலிக்கு பரிசு கொடுத்து, திகார் சிறையில் இருக்கும் இவர் யார் தெரியுமா?..!



AIADMK Flag Sukesh Chandrasekar Case Issue Anti Corruption Dept Investigation Report

இரட்டை இலை சின்னம் இலஞ்ச விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் குறித்த பல பரபரப்பு தகவல் அமலாக்கத்துறையால் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுக்க ரூ.50 கோடி இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், அகில இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயலாற்றி வந்த சுகேஷ் சந்திரசேகர், கடந்த 2019 ஆம் வருடம் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் கைது செய்யப்பட்டார். கைதுக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் சுகேஷின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சுகேஷ் சட்டவிரோதமாக பலவழியில் பணப்பரிமாற்றம் செய்தது உறுதியானது. பெங்களூரை சார்ந்த சுகேஷ் சந்திரசேகரர், அனைத்து அரசியல் கட்சியுடனும் நெருங்கிய தொடர்பை வைத்துக்கொண்டு பணம் சம்பாரித்து வந்துள்ளார். 

AIADMK

சென்னையை சார்ந்த 2 தொழிலதிபர்களிடமும் இலட்சக்கணக்கில் மோசடி செய்த நிலையில், சுகேஷுக்கு உடந்தையாக இருந்த அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கிடைத்த பணத்தை வைத்து சுகேஷ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், காதலி ஜாக்குலினுக்கு ஆடம்பர பொருட்களையும் வாங்கி பரிசாக வழங்கியுள்ளார்.  

அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் 7 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் உள்ள பல தகவல்கள் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. 

AIADMK

அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், "சுகேஷ் சந்திரசேகர் தனது காதலிக்கு ரூ.50 இலட்சம் மதிப்புள்ள குதிரையை வாங்கி பரிசளித்து வியப்படைய வைத்துள்ளார். பூனைக்குட்டிகள் என்றால் காதலிக்கு பிடிக்கும் என தெரியவந்த நிலையில், அவர் வீட்டிலேயே பூனைகளையும் வளர்த்து வந்துள்ளார். 

இதனால் ரூ.9 இஅட்சம் மதிப்புள்ள பாரசீக பூனைக்குட்டியும் வாங்கி பரிசளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர்த்து பல்வேறு விலையுயர்ந்த ஆடம்பர பொருட்கள், கார்களும் பரிசளிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பல அரசியல் புள்ளிகளிடம் இருந்து ரூ.200 கோடி வரை இலஞ்ச பணத்தை சுகேஷ் பெற்றுள்ளார். 

AIADMK

மத்திய அரசின் பணி நியமனம், பணியிடமாற்றம் உட்பட பல வேலைக்கு சுகேஷை அணுகியவர்கள் இலட்சத்தில் பணத்தை குவித்துள்ளனர். டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு அவ்வப்போது சுகேஷ் விமான பயணமும் செய்துள்ளார். மும்பையில் இருந்து டெல்லி, டெல்லியில் இருந்து சென்னை என பயணங்கள் நடந்துள்ளது. இதற்காக மட்டும் ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

கோடிஸ்வரர்களை மிஞ்சும் விலையுர்ந்த பெராரிஸ், பென்ட்லீஸ், மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ., லேண்ட் ரோவர்ஸ், லம்போகினி வகை உட்பட 16 வகை கார்களையும் வைத்துள்ளார். வி.ஐ.பிக்கள் மட்டும் வாங்கக்கூடிய ரோல்ஸ் ராயல்ஸ் காரையும் வாங்கி வைத்துள்ளார். இந்த கார்களை நிறுத்த பிரம்மாண்ட அளவிலான சொகுசு பங்களாவும் கட்டப்பட்டுள்ளது. 

AIADMK

பங்களாவுக்கு உள்ளேயே மினி பார், தியேட்டர், ஜிம் போன்றவையும் இருந்துள்ளது. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களால் தயார் செய்யப்பட்டவை ஆகும். டி.வி. பொருத்தப்பட்ட சோபா, அறைகள் தங்கம் போல ஜொலிப்பது என பல வசதிகள் இருந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.