#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருச்சியில் நிலைதடுமாறிய ஏர் இந்தியா விமானம்; அதிர்ச்சிக்குள்ளான பயணிகளால் பெரும் பரபரப்பு..!!
திருச்சியிலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டு டவர் மீது மோதி நிலை தடுமாறியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு 130 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏர்போர்ட் முடிவில் உள்ள எல்லைப் பகுதியில் கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீதிருந்த சுவர் மீது மோதி நிலை தடுமாறியதில் சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டது விமானத்தை உடனடியாக தரையிறக்க முடியாத சூழ்நிலையில் விமானியின் சாமர்த்தியமான முயற்சியினால் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 130 பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விமானத்தை இயக்கிய விமானிக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சம்பவம் நிகழ்ந்த திருச்சி விமான நிலையத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் விபத்து நடந்த பின்னணி குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.