அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உயிரிழப்பு..! உடல்நல குறைவால் 74 வயதில் மரணம்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலவர் அஜித் ஜோகி உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அஜித் ஜோகி. மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்தவர். தற்போது 74 வயதாகும் இவர் மாரடைப்பு காரணமாக கடந்த 10 ஆம் தேதி ராய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையியல், அஜித் ஜோகியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துவந்தது. இந்நிலையில் உடல்நிலை மிக மோசமாதாய் அடுத்து அஜித் ஜோகி இன்று மரணமடைந்தார்.
அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையியல் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் இறந்த முன்னாள் முதல்வருக்கு இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.