மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ! அம்மா என்னை காப்பாத்துங்க.. அவசரப்பட்டு எலி மருந்தை சாப்பிட்டு விட்டேன்.. மருத்துவர்களிடம் கெஞ்சிய இளைஞர்..பரபரப்பு..!
உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரதாப் சிங். இவருக்கு சதந்திர குமார் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி சண்டையிடுவதை தொடர் கதையாக கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நடந்த குடும்ப சண்டையில் ஆத்திரமடைந்த சதேந்திர குமார் எலி மருந்து உட்கொண்டுள்ளார். பின்னர் எலி மருந்தின் வீரியம் தாங்காமல் அலறி துடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த குடும்பத்தினர் சதேந்திர குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதேந்திர குமார் மருத்துவர்களிடம் தன்னைக் காப்பாற்றி விடும்படி கதறி அழுதுள்ளார். பின்னர் சதேந்திர குமாரை அமைதிபடுத்திய மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.