மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரிக்கை! இனி இந்த கம்ப்யூட்டர்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது
ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயன்படுத்தப்படும் புதிய பாதுகாப்பு வசதியை முன்னிட்டு, இனி ஐஆர்சிடிசி இணையதளத்தை விண்டோஸ் XP விண்டோஸ் சர்வர் 2003 போன்ற இயங்குதளங்களை கொண்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஐஆர்சிடிசி இணையதளத்தை இயக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்வதற்காகவும், டிக்கெட்டின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் ஐஆர்சிடிசி இணையதளம். தற்பொழுது ரயில்வே டிக்கெட் மட்டுமின்றி சுற்றுலா செல்வதற்கான பல்வேறு வசதிகளையும் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்குகிறது.
இந்த ஐஆர்சிடிசி இணையதளத்தை கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் மூலம் நாம் இயக்கலாம். இன்னும் வசதியாக ஐஆர்சிடிசி ஆல் மொபைல் ஆப் போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் வண்ணம் புதிய தொழில்நுட்பமான TSL 1.2 அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொழில்நுட்பம் பழைய விண்டோஸ் இயங்குதலங்களான விண்டோஸ் XP, windows சர்வர் 2003 போன்றவைகளில் செயல்படாது. எனவே irctc இணையதளத்தினை இனிமேல் இந்த இரண்டு இயங்குதளங்களை கொண்டுள்ள கம்ப்யூட்டர்களில் இயக்க முடியாது.
ஒருவேளை உங்கள் கம்ப்யூட்டர்களில் இந்த பழைய இயங்குதளங்கள் இருப்பின், ஐஆர்சிடிசி இணையதளத்தை இயக்க உடனடியாக இதனைவிட புதிய இயங்குதளங்களை இன்ஸ்டால் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.