#Watch Video: அமேசானில் ரூ.20,000 மதிப்புள்ள சோனி ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் வீடியோ வைரல்.!



amazon-delivery-cheating-youth-ordered-rs-20000-sony-he

 

அமேசான், பிளிப்கார்ட் உட்பட ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளில் முன்பதிவு செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக செங்கல் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்த சம்பவங்கள் முன்பு அதிகம் நடந்து வந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் யாஷ் விஷ் என்ற இளைஞர், ரூ.19,900 மதிப்புள்ள Sony XB910N Wireless ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கடந்த டிசம்பர் 08ம் தேதி மதியம் 02:40 மணியளவில் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 

ஆர்டரை பெற்றதும் அதனை வீடியோ எடுத்தவாறு இளைஞர் பிரித்த நிலையில், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஹெட்போனுக்கு பதில், பெப்சொடன்ட் பேஸ்ட் வைத்து அனுப்பப்பட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர், இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். தற்போது அவை செய்தி நிறுவனங்களின் பார்வைக்கு வந்து செய்திகள் பதிவு செய்ய தொடங்கவே, அமேசான் இதுகுறித்து விசாரணையை முன்னெடுத்துள்ளது.