பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காக்க போராடிய ஆம்புலன்ஸ் டிரைவர்! தூக்கி கொண்டாடும் பொதுமக்கள்!



Ambulance driver saved child

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்து 40 நாட்களே ஆன குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக அந்த குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற போலீசாரும் ஒத்துழைத்தனர். பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 360 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் 4 மணி 20 நிமிடங்களில் கடந்தார். 

ambulance driver

இதனையடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு தற்போது நிமோனியா காய்ச்சல் இருப்பதால், காய்ச்சலை குணப்படுத்திய பிறகு அறுவைசிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தனக்கு சம்பளம் வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துவந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பொதுமக்கள் பாராட்டி கவுரவித்துள்ளனர்.