திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா.. இறப்பில் இத்தாலியை மிஞ்சி முதலிடம்!
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,577 ஆக உயர்ந்து இத்தாலியை மிஞ்சியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 84000 பேர் பாதிக்கப்பட்டு 3339 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது சீனாவை விட ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகள் கொரோனாவிடம் சிக்கி தவிக்கின்றனர்.
சீனாவிற்கு அடுத்தப்படியாக ஈரானில் கொரோனா அதிகமாக பரவ துவங்கியது. ஆனால் தற்போது அந்நாடில் பாதிப்பு குறைந்துவிட்டது. அடுத்தப்படியாக ஐரோப்பா நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஜன்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியது.
குறிப்பாக இத்தாலியில் கொத்துகொத்தாக உயிர்கள் பலியயாக துவங்கின. இறப்பில் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருத்த இத்தாலியில் நாளுக்குநாள் இறப்பு விகிதம் அதிகரித்தது. நேற்று வரை இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152000 ஆகவும் இறப்பு 19400 ஆகவும் இருந்து வருகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தாமதமாக தென்பட்டாலும் பாதிப்பு விகிதம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஒருநாள் சராசரி பாதிப்பு 25000க்கும் மேலாக உள்ளது. இறப்பு விகிதமும் 1500க்கும் மேல் உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 533000 பேருக்கு கொரோனா பாதிப்பும் 20500 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது இறப்பில் இத்தாலியை மிஞ்சி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.