3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா! சற்றுமுன் வெளியான அதிரடி உத்தரவு!
கடந்த மாதம் இந்திய CRPF வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்கத்தில் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று குவித்தது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்க உட்பட பல நாடுகளின் தலையிட்டால் சற்று அமைதி ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உருவானதுமே அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளை தடுக்கும்படியும், பாகிஸ்தானை தீவிரவாதிகளின் புகலிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார். இதனால் சற்று அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய பாகிஸ்தான் சில பயங்கரவாதிகள் கைது, அவர்களது சொத்துக்கள் முடக்கம் போன்ற சில நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல என்றும் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினம்.
எனவே பயங்கரவாத அமைப்புகள் மீது உடனே அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானின் செயல்பாடுகளை அமெரிக்க தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.