குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்றால் என்ன? எல்லோருக்கும் புரியும்படி கூறிய அமித் ஷா!



amith-sha-talk-about-caa

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கானது, குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், எதிர்க்கட்சியினர் ஏன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் சுற்றியே அரசியல் செய்கின்றனர் எனக் கேள்வி எழுப்பினார்.

CAA

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம் எந்த ஒரு இஸ்லாமியரின் அல்லது சிறுபான்மையினரின் குடியுரிமையும் பறிக்கப்படாது எனத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதாகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்கானது, குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்றும் தெரிவித்தார்.