திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சச்சோ... வெடித்து சிதறிய மின்சார மெத்தை... பரிதாபமாக உயிரிழந்த நபர்... விபத்தின் பின்னணி என்ன.?
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஹாசி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் மின்சாரம் மெத்தை வெடித்ததில் அதில் உறங்கிக் கொண்டிருந்த நபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஹாசி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறத. 38 வயதுடைய நபர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். இன்று அதிகாலை அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது மின்சார மெத்தை வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஃபின்ஸுக்லாங் காங்விர் என்பவரது வீட்டில் தான் நடைபெற்று இருக்கிறது. காவல்துறையின் விசாரணையில் இறந்த நபர் கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மின்சார மெத்தை வெடித்து சிதறியதில் அந்த வீட்டில் இருந்த கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறி இருக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான முதல் கட்ட விசாரணையில் மின்சார மெத்தையை அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்ததை விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. எனினும் அந்த வீட்டில் இருந்தவர்கள் இந்த விபத்தில் இறந்த நபர் இதற்கு முன்பு தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார் என்று தெரிவித்ததால் இதில் தற்கொலை முயற்சி எதுவும் இருக்குமா எனவும் காவல்துறை விசாரித்து வருகிறது.