மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆம் வகுப்பு மாணவர் எரித்துக் கொலை... மாணவரின் மரண வாக்குமூலத்தால் பரபரப்பு.!
சகோதரிக்கு தொந்தரவு கொடுத்த நபரை தட்டி கேட்டதால் பத்தாம் வகுப்பு மாணவன் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் வசித்து வந்த அமர்நாத்.15 வயதான இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சார்ந்த மற்றொரு நபர் வெங்கடேஸ்வர்(21). இந்நிலையில் வெங்கடேஸ்வர் என்பவர் அமர்நாத்தின் சகோதரியை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வெங்கடேஸ்வரை தட்டி கேட்டிருக்கிறார் அமர்நாத்.
இதனால் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கடேஸ்வர் அமர்நாத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததும் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டு இருக்கிறார் அமர்நாத். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்து அமர்நாத்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அமர்நாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் ஆம்புலன்ஸில் வரும்போது தன்னை வெங்கடேஸ்வர் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் எரித்து கொலை செய்ததாக அமர்நாத் மரணவாக்கம் குளம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.