இளம்பெண்களுக்கு மாதம் ரூ.1,500; ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் திட்டம் - ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் சந்திரபாபு நாயுடு.!



Andhra chandhra Babu Naidu election

2024ல் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராஜமகேந்திரவரம், வேமகிரியில் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நடைபெற்றதைத்தொடர்ந்த்து, அங்கு தெலுங்கு தேசம் காட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

அவர் அங்கிருந்த தொண்டர்களிடையே உரையாற்றுகையில், "2024 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியடைந்து, நாம் ஆட்சிக்கு வந்தால் மகாசக்தி திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பும் இளம்பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1,500 வரவு வைக்கப்படும். பெண்களுக்கு 59 வயது வரையில் உதவித்தொகை வழங்கப்படும்.

தள்ளி வந்தனம் திட்டம் மூலமாக ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காக தாய்மார்களின் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 வரவுவைக்கப்படும். மாவட்ட எல்லைக்குள் இயங்கும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வாங்கப்படும். தீபம் திட்டமானது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

மாநிலத்தில் வேலை இல்லாத நபர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகப்புடம். விவசாயிகளின் துயரத்தை போக்க அன்னதாதா திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும். நாம் அஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டமும் நிறைவேற்றப்படும். ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை நான் தருவேன்" என பேசினார்.