மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துக்கம் விசாரிக்க சென்ற எம்.எல்.ஏவை துரத்தி வெளுத்த மக்கள்.. பரபரப்பு சம்பவம்.!
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் கொலைக்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ தான் காரணம் என கூறி பொதுமக்கள் அவரை விரட்டி அடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் கோட்டபள்ளி கிராமத் தலைவராக பணியாற்றி வந்தவர் கஞ்சி பிரசாத். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கஞ்சி பிரசாத்தின் மறைவுக்காக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ் என்பவர் ஆறுதல் கூறுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகி கொலைக்கும், எம்.எல்.ஏ வெங்கட்ராவ் இருக்கும் தொடர்பு உள்ளது எனக்கூறிய நிலையில், மக்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கிராம மக்களிடமிருந்து எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவை பாதுகாப்பாக மீட்டு வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும், தற்போது அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.