#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேரலில் பிணவாடை.. திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..!
பிளாஸ்டிக் பேரலில் 35 வயது பெண்ணின் சடலம் இருந்த நிலையில், இறந்த பெண் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், சோமயாஜுலு கிராமத்தில் ஊருக்கு வெளியே சிறிய அளவிலான பாலம் ஒன்று உள்ளது. அப்போது அவ்வழியே சென்றவர்களுக்கு அங்கு ஏதோ துர்நாற்றம் வீசியதாக தெரிந்துள்ளது.
இதனால் உடனே அருகில் சென்று பார்த்த போது, அங்குள்ள சிறிய அளவிலான பிளாஸ்டிக் பேரலில் 35 வயதுடைய மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இந்த விஷயம் தொடர்பாக கர்னூல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அத்துடன் கொலை செய்யப்பட்ட பெண் சேலை அணிந்து, கழுத்தில் செயின் மற்றும் கம்மல், மூக்குத்தி போன்றவை அணிந்திருந்ததால் வேறு எங்கேயோ கொலை செய்து இங்கே பேரலில் தூக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கைப்பற்றி, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த பெண் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.