மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நில அபகரிப்பு கும்பலால் தாசில்தாருக்கு நடந்த சோகம்; 3 பேர் கும்பலால் கொடூர கொலை.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ரமணய்யா. பத்மநாபம், பத்ரகொத்துர் உட்பட பல இடங்களில் தாசில்தாராக வேலை பார்த்து வந்துள்ளார். இறுதியாக விசாகப்பட்டினத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பத்துப்பள்ளி பகுதிக்கு 2 நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று காலை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டவர், விசாகப்பட்டினம் நகரில் இருக்கும் கொம்மாடியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இரவு சுமார் 10 மணியளவில் அவரை மர்ம நபர்கள் வீட்டின் தரைதளத்திற்கு வரவழைக்க, அங்கு இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அச்சமயம் ஆத்திரமடைந்த கும்பல் இரும்பு ராடால் தாசில்தாரை அடித்தே கொலை செய்தது. சுருண்டு விழுந்த தாசில்தார் நிகழ்விடத்திலேயே பலியாகினர். குடும்பத்தினரால் மீட்கப்பட்ட ரமணய்யா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும், அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கொலையாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் கும்பலால் தாசில்தார் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.