மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஆந்திராவில் பயணிகள், எக்ஸ்பிரஸ் இரயில்கள் தடம்புரண்டு, மோதி பயங்கர விபத்து; 3 பேர் பலி.. மீட்புப்பணிகள் தீவிரம்.! மீண்டும் பயங்கர சோகம்?.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம், கண்டகப்பள்ளி பகுதியில் இன்று இரண்டு இரயில்கள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விசாகப்பட்டினம் - ராயக்கடா பாசஞ்சர் இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதாகவும். அப்போது, அதே வழித்தடத்தில் வந்த பளாசா விரைவு இரயில் பயணிகள் இரயில் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் இரயில்வேத்துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக விபத்தில் 3 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு இரயில்கள் மோதிக்கொண்ட காரணத்தால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த சில மாதமாகவே இந்தியாவில் இரயில் விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன.