மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பிரேக் பிடிக்காததால் பேருந்து நிலையத்திலேயே சோகம்; நடத்துனர், பெண் பயணி உட்பட 3 பேர் உடல் நசுங்கி பலி.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா, நெகலூர் பேருந்து நிலையத்தில், இன்று விஜயவாடாவில் இருந்து குண்டூர் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு செல்வதற்கு காத்திருந்தது.
அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கிய நிலையில், திடீரென பேருந்தின் பிரேக் பிடிக்காத காரணத்தால், நடைமேடையின் மீது பேருந்து பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பேருந்துக்கு முன்புறம் இருந்த நடத்துனர், பெண், பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பேருந்தில் இருந்த 10 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட காவல்துறையினர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.