மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி, 2 குழந்தைகள், தாய் ஆகியோரை கொன்று மருத்துவர் தற்கொலை; கடன் பிரச்சனையால் விபரீதம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீனிவாசஸ் (வயது 40). இவரின் மனைவி உஷா (வயது 38). தம்பதிகளுக்கு சைலஜா என்ற 9 வயதுடைய மகளும், ஸ்ரீஹான் என்ற 8 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் பாட்டி ராமண்ணம் (வயது 65) வசித்து வருகிறார்.
ஸ்ரீனிவாஸ் கடந்த சில ஆண்டுகளாகவே கடன் பிரச்சனையில் தவித்து வந்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சனை நிலவி குடும்ப சுமை அதிகரித்து இருக்கிறது. ஒருகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஸ்ரீனிவாஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாய் ஆகியோரை அடித்து கொலை செய்துள்ளார்.
பின் வீட்டின் பால்கனி பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட அவிசாரணையில் ஸ்ரீநிவாஸ் கடன் பிரச்சனையில் தவித்து வந்ததால், அதனால் குடும்பத்தினரை கொலை செய்து தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. விசாரணை தொடருகிறது.