மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவி சித்ரவதை; பாத்ரூம் நீர் குடித்து உயிரை கையில் பிடித்த இளம்பெண்.! கைகளை உடைத்து பெருங்கொடுமை.!!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்ப்பவர் எஸ்.எம் சந்த் பாஷா.
கடந்த 2017ல் பாஷாவுக்கும் - சபீஹா என்ற பெண்மணிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளார். தொடர்ந்து பெண் குழந்தையையே ஏன் பெற்றெடுக்கிறாய் என பாஷா மற்றும் அவரின் பெற்றோர் சபீஹாவை துன்புறுத்தி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும், அவர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனிடையே, பாஷாவின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் பாஷாவுக்கு ஆண் வாரிசு வேண்டி வேறு திருமணம் செய்து வைக்க போகிறோம் என கூறி வந்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரின் கை விரலை உடைத்து, தனி அறையில் அடைத்து உணவும் வழங்காமல் சித்ரவதை செய்திருக்கின்றனர். இதனால் அவர் குளியல் அறையில் வரும் நீரை குடித்து உயிரை காப்பாற்றியுள்ளார். இவர் நீண்ட நாட்கள் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் மகளின் நிலையை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து பாஷா உட்பட அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது.