பச்சபிள்ளைடா அது.. சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை, சித்தப்பா.. குடி அரக்கனால் நடந்த கொடூரம்.! 



Andra Pradesh East Godavari Minor Girl Sexual Abused by Father

மனைவி பிரிந்து சென்றுவிட, வீட்டில் இருந்த சொந்த மகளை தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து சீரழித்த கொடூரம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டம், தாடே பள்ளிக்கூடேம் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தந்தை மற்றும் சித்தப்பாவுடன் ஒரே இல்லத்தில் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பா மதுபழக்கத்தை வைத்துள்ளனர். 

இதனால் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளனர். ஒரு சமயத்தில் பொறுமையை இழந்த இருவரின் மனைவிகளும், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக தங்களின் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 

தாய் மற்றும் சித்தி பிரிந்து சென்றதும் சிறுமி தனது தந்தை, சித்தப்பாவுடன் வசித்து வந்த நிலையில், போதையில் வீட்டிற்கு வரும் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றனர். 

Andra Pradesh

இதனால் சிறுமியும் பயத்தில் செய்வதறியாது இருந்த நிலையில், இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர், இதுகுறித்து பள்ளிக்கூடேம் மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், அவரது தந்தை மற்றும் சித்தப்பாவின் கொடூர செயல் உறுதியானது. இதனையடுத்து, இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.