#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள், 1 ஆசிரியர் நீரில் மூழ்கி பரிதாப பலி..!
ஆசிரியர், மாணவர்கள் உட்பட 6 பேர் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகினர்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர், மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 6 பேர் கிருஷ்ணா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் 6 பேரும் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது என்ற நிலையில், அனைவரும் காப்பாற்றக்கூறி அலறித்துடித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் விரைந்து செல்வதற்குள், 6 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆசிரியர் மற்றும் 5 மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.