#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பச்ச மண்ணுடா அந்த குழந்தை.! 12 வயது சிறுமி நிறைமாத கர்ப்பம்.. சொந்த அண்ணனே அரங்கேற்றிய கொடூரம்..!!
பெற்றோர் விவசாயத்தை கவனிக்க தோட்டத்திற்கு சென்றுவிட, வீட்டில் தனியே இருந்த தங்கையை அண்ணனே அத்துமீறி சீரழித்த துயரம் நடந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக 12 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ள பதைபதைப்பு துயரம் தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில், 50 வயதுடைய விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரின் மனைவி குடும்ப சண்டையில், கடந்த 12 வருடங்களுக்கு முன்னரே கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த விவசாயி, வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவருக்கும் - விவசாயிக்கும் பெண் குழந்தை பிறந்த நிலையில், சிறுமிக்கு 12 வயது ஆகிறது. கணவன் - மனைவி இருவரும் விவசாய வேலை பார்த்து வருவதால், தினமும் தோட்டத்திற்கு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக சிறுமி வீட்டில் இருந்த நிலையில், அதனை பயன்படுத்திக்கொண்ட விவசாயியின் மூத்த மனைவி மகன் தங்கை என்றும் பாராது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டுள்ளான். இந்த துயரம் தொடர்ந்து நடக்க, ஒரு சமயத்தில் பெற்றோருக்கு விஷயம் தெரியவந்துள்ளது.
அவர்கள் மகளின் வாழ்க்கையை காப்பாற்றாமல், அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக பிரசவ வலி ஏற்பட்டு, அவர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்கள் காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி, சிறுமியின் அண்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.