தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆப்லைன் வகுப்புக்கு எதிர்ப்பு.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
பெற்றோர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ளச்சொல்கிறார்கள் என்ற வருத்தத்தில், விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயநகரம், நெல்லிமர்லா கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மனீஷா அஞ்சு (வயது 16). இவர் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் பயின்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக இணையவழியில் வகுப்புகளை கவனித்து வந்த சிறுமி, தொடர்ந்து இணையவழியிலேயே பயில விரும்பி இருக்கிறார்.
ஆனால், பெற்றோர் அவரை வலுக்கட்டாயப்படுத்தி நேரடி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி பேருந்து பயணத்தின் போதே செல்போனை வீசியெறிந்த நிலையில், இந்த விஷயத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் மறுநாளே புதிய அலைபேசியையும் மகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.
தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் செயல்படுகிறார்களே என்ற மனஉளைச்சலில் இருந்த சிறுமி, சம்பவத்தன்று (பிப். 16) ஆம் தேதி தனது விடுதி அறையை பூட்டி, உள்ளே இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமி பெரும்பாலும் யாரிடமும் பேசமாட்டார் என்பதால், அவரை பிற மாணவிகளும் தேடவில்லை.
இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த பிற மாணவிகள் பிப். 17 ஆம் தேதி மாலை நேரத்தில், மனீஷாவின் அறை பூட்டியே இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர், விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கல்லூரி நிர்வாகத்தார் மாற்றுச்சாவியை உபயோகம் செய்து கதவை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது, மாணவி மனீஷா அஞ்சு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக இருந்துள்ளார். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த எட்சர்லா காவல்துறை அதிகாரிகள் மனீஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.