மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 பேர் கும்பலால் 30 மணிநேரம்.. 22 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நாடே அதிர்ச்சி..!
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண், மருத்துவமனை காவலாளிகள் 3 பேரால் 30 மணிநேரம் தொடர் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களின் அலட்சியத்தால் பெண் அனுபவித்த பெருந்துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண், மனநலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினத்தில் இளம்பெண் சிகிச்சை முடிந்து மருத்துவமனைக்கு வெளியே வந்த நேரத்தில், லிப்ட் அருகே மருத்துவமனை காவலாளிகள் 3 பேர் இருந்துள்ளனர்.
அவர்கள் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து பெண்ணை அறைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு மூவரும் மதுபானம் அருந்தி 30 மணிநேரம் பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற மகள் வீட்டிற்கு வராததால், அவரின் அலைபேசிக்கு பெற்றோர் தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர் மகளை தேடிவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர், மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் எங்காவது சென்றிருப்பார், நீங்களே தேடிக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். சரி அலைபேசி நம்பரை வைத்தாவது ட்ராக்கிங் செய்து பாருங்கள் என்று கதறியும் பலன் இல்லை. இந்த நிலையில், 3 கயவர்களால் தொடர் கூட்டுப்பாலியல் பலாத்காரம், சித்ரவதைக்கு உள்ளாகிய பெண்மணி லிப்ட் அருகே கிழிந்த ஆடையுடன் மயங்கி இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை தந்துள்ளனர். இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, செய்திகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விஜயவாடா காவல் துறையினர், சி.சி.டி.வி கேமிரா ஆதாரத்துடன் 3 காவலாளியை கைது செய்தனர். புகாரை பெற்று நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.