பெண்கள் முகத்தை துப்பட்டாவால் மூட அதிரடி தடை! என்ன காரணம் தெரியுமா?
இஸ்லாமியர்கள் மத்தியில் பெண்கள் ‘ஜில்பாப்’ எனப்படும் பர்தா அணிவது வழக்கம். இதனால் பெண்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.
ஆனால் இன்று பெண்கள் பலரும் தங்களது முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டுதான் செல்கின்றனர். இதற்கு மாசு வை ஒரு காரணாமாக கூறினாலும், தங்களது முகத்தை யாரும் பார்க்க கூடாது என்பதும் ஒரு காரணம்தான்.
இந்நிலையில் பள்ளிச் சிறுமிகள் முதல் வயதானவர்கள் ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி முகத்தை மூடிக்கொண்டு செல்கின்றனர். இதில் பல நாமக்கல் இருந்தாலும் இதையே சாக்காக வைத்து பலரும் சமூக விரத செயல்களில் ஈடுபடுவதாக பல புகார்கள் வந்துள்ளது.
மேலும் தற்போது பெண்கள் கல்லூரி வகுப்புகளிலும், வாழகத்திலும் கூட முகத்தை துப்பட்டாவால் மூடுவதாக தெரிகிறது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் இனி வகுப்புகளிலோ, கல்லூரி வளாகத்திலோ பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தற்போது பொறியியல் கவுன்சிலிங் முடிந்து முதலாண்டு பி.இ. மற்றும் பி.டெக் வகுப்புகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை போன்றவை குறித்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.