மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருமகளின் தலையை வெட்டி, 6 கி.மீ. நடந்து வந்த மாமியார்.! விசாரணையில் பகீர் காரணம்.!
ஆந்திர மாநிலத்திலுள்ள அன்னமய்யா மாவட்டத்தில் இருக்கும் கொத்தா பேட்டை பகுதியில் ராமாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் சுப்பம்மா என்ற பெண் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
அவர் மருமகள் வசுந்திராவுக்கு 35 வயதாகும் நிலையில், இவர்களுக்கு இடையில் அடிக்கடி பல்வேறு விதமான குடும்பத்த தகராறுகள் நடைபெற்றுவந்தது. அத்துடன் வசுந்தராவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக மாமியார் சுப்பம்மா சந்தேகம் அடைந்தார்.
தனது குடும்ப சொத்தை அவருடைய பெயருக்கு வசுந்தரா மாற்றி விடுவார் என்று பயத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சுப்பம்மா தனது உறவினர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட வருமாறு மருமகள் வசுந்தராவை அழைத்துள்ளார்.
அப்போது அங்கே வந்த வசுந்தராவின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய சுப்பம்மா மருமகளின் தலையை எடுத்துக் கொண்டு ஆறு கிலோமீட்டர் வரை போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து வந்துள்ளார். மாமியாரே மருமகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுப்பம்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்