மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிகக் கேவலமான செயல்! வயதான தனது தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள கொடூர மகன்.!
ஆந்திராவில் வயதான தனது தாயாருக்கு குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் வையூரு மண்டலில் உள்ள அக்னூறு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார் 86 வயது பெண். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் கடைசி மகன் (48 வயது) லாரி டிரைவராக வேலை செய்கிறார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்னிலையில் வழக்கம்போல் டிரைவர் பணிக்கு சென்று வீடு திரும்பின அவர் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது வயது முதிர்வு காரணமாக வீட்டில் தனியாக படுத்து இருந்த தனது தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை அருகில் வசிப்பவரிடம் அந்த மூதாட்டி தெரிவித்தையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாத் கூறுகையில், ‘நாங்கள் பாதிக்கப்பட்ட நபரின் வாக்குமூலத்தை பெற்றுள்ளோம். மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ளோம்.’ என்றார்.
இது மாதிரியான செய்திகளை பதிவிடுவது மிக வேதனை அளிக்கிறது. இருந்தாலும் இந்த சமுதாயத்தில் இந்த மாதிரியான கேவலமான மகனும் உள்ளான் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு.