அதிரவைத்த ஆந்திரா, நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?



anthira-yesterdays-corona-states

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கொரோனா பரிசோதனையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரையில் மில்லியன் கணக்கான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் 70,584 பரிசோதனைகள் செய்ததில் 10,093 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

anthiraமேலும் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிகபட்ச பாதிப்பு நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் தான் ஆகும். நேற்று 65 பேர் பலியான நிலையில் மொத்த எண்ணிக்கை 1,213ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஆந்திரா மாநிலம். இது வரை 1,20,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பலி எண்ணிக்கையில் 8வது இடத்தில் இருக்கிறது.