திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவன் மீது தீராத ஆத்திரம்.. வெறியை அடக்க தாய்க்கு இரையான 4 பிஞ்சுகள்.!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரபண்டா என்பவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 7 மாதம் முதல் 5 வயது வரை கொண்ட சிறு சிறு பிள்ளைகள் 4 பேர் இருந்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக லலிதாவுடன் கணவர் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், லலிதாவை அவர் தாக்கியுள்ளார். இதனால் பொறுக்க முடியாத லலிதா ஒரு கட்டத்தில் போலீசுக்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் வேலைக்கு செல்வதாக கூறி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பியவர் ஒரு பாசன கால்வாய்க்கு அருகில் சென்று குழந்தைகளை ஒவ்வொருவராக அந்த கால்வாய் தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கத்தி கூச்சலிட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் லலிதா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று குழந்தைகளை பிணமாக மீட்ட நிலையில் மற்றொரு சிறுமியின் உடலை தேடி வருகின்றனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் லலிதாவை தேடி வருகின்றனர். கணவர் கொடுமை தாங்காமல் பெற்ற குழந்தைகளை தாயே கால்வாயில் தள்ளி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.