மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆதார் அட்டையை புதுப்பிக்க போறிங்களா.? உங்களுக்கான குட் நியூஸ் இதோ.!
ஆதார் அட்டை இந்திய குடிமகன்களின் தனித்துவமான அடையாள அட்டையாக இருந்து வருகிறது. இந்திய மக்களுக்கான ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அதார் அடையாள அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என யூஐடிஏஐ அறிவித்திருந்தது. மேலும் இந்த ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலத்தவனையையும் கொடுத்திருந்தது.
அதன்படி ஜூன் 14ஆம் தேதி வரை அதார் அட்டையை புதுப்பிப்பவர்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அந்த ஆணையம் அறிவித்திருந்தது. இந்த காலத் தவணையை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது யூஐடிஏஐ.
தற்போது இந்த கால அளவை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீடித்து புதிய ஆணையை வெளியிட்டு இருக்கிறது யுஐடிஏஐ. இந்த புதிய அறிவிப்பின்படி அதார் அட்டையை புதுப்பிப்பவர்கள் டிசம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அதார் அட்டைக்கான ஆணையம் அறிவித்திருக்கிறது.