திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சீனப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் மகனும் ராணுவத்திற்க்கே! கண்ணீருடன் பேசிய வீரமரணமடைந்த பழனியின் மனைவி!
சீனா தங்கள் எல்லைக்கு அருகில் ராணுவ விமான தளம், 66 முக்கியச் சாலைகளை இந்தியா நிர்மாணிப்பதால் கோபமுற்ற சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் படைகளைக் குவித்து வந்தது.
இந்தநிலையில், பதிலுக்கு இந்தியாவும் தனது துருப்புகளைக் குவிக்க எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் கர்னல் நிலை அதிகாரி மற்றும் இரு இராணுவ வீரர்களும் சீனப்படையினரால் கொல்லப்பட்டதாகச் செய்தியினை வெளியிட்டிருந்தது இந்திய இராணுவம்.
இதில் வீர மரணமடைந்த மூவரில் ஒருவர் ராமநாதபுர மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகனான பழனி என்பவர். இந்திய இராணுவத்தில் ஹவில்தாரராகப் பணிபுரியும் இவருக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா என்கின்ற 10 வயது ஆண் குழந்தையும் திவ்யா என்கின்ற 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த பழனி குறித்து அவர் மனைவி வானதி தேவி கூறுகையில், எங்கள் மகன் பிரசன்னாவை கூட இராணுவத்தில் பிற்காலத்தில் சேர்க்க நினைத்தார் என் கணவர் பழனி என கண்ணீருடன் கூறியுள்ளார் வீரமரணம் அடைந்த பழனியின் மனைவி. எல்லையில் உயிரிழந்த பழனியின் உடல் ராணுவ விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்துக்கு எடுத்து வரப்படுகிறது.