#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
8 ஆண்டு மரணத்துடன் போராடிய இராணுவ வீரர் உயிரிழப்பு.. கண்ணீரில் மனைவி, குழந்தைகள்.!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அப்போது கர்ணல் கரன் பீர் சிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது கோமா நிலைக்குச் சென்றார். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் எப்படியாவது கண்விழித்து விடுவார் என அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த எட்டு ஆண்டுகளாக காத்திருந்தனர்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீரமரணம் அடைந்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த கரன் பீர் சிங், சென்னை ராணுவ பயிற்சி பள்ளியில் கடந்த 1998-ம் ஆண்டு பயிற்சி எடுத்து ராணுவத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.