#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தோழியை பலாத்காரம் செய்ததால் டாக்டரை கொன்றோம்.." சிறுவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்.!!
டெல்லியில் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மருத்துவர் சுட்டு படுகொலை
டெல்லியில் உள்ள நிமா மருத்துவமனையில் ஜாவித் அக்தர் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 16 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் காலில் காயம் ஏற்பட்டதாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களது காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்பு மருத்துவரை காண வேண்டும் என்று கூறி அக்தரின் அறைக்குள் நுழைந்த சிறுவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை
மருத்துவமனையில் டாக்டர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனை ஊழியர்கள் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி கொலை.. சதித்திட்டத்தில் மாஸ்டர் மைண்ட்.. கணவர் பகீர் செயல்.!
அதிர்ச்சி வாக்குமூலம்
இந்நிலையில் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மருத்துவர் ஜாவீத் அக்தர் தங்களது 14 வயது தோழியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அதற்கு பலி வாங்குவதற்காக மருத்துவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டேய் வலிக்குதுடா ப்ளீஸ்... முரட்டுத்தனமான உடலுறவு.!! பரிதாபமாக பலியான 23 வயது பெண்.!!