நியூ இயர் செலிபிரிரேசன்.. சரக்கு போதையில் தள்ளாடினால் வீட்டிற்கு செல்ல உதவி - முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!



Assam CM Announce New Year Celebration Drunken Man Do not Drive If You Want Help Call Helpline

அசாம் மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடட்டதையொட்டி அம்மாநில அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவிக்கையில், "ஒவ்வொரு வருடத்திலும் புத்தாண்டு தினத்தில் அசாமில் பல விபத்துகள் நடக்கிறது. இதனால் பலரும் உயிரிழக்கின்றனர். விபத்துக்கு பெரும் காரணமாக மதுபோதையில் வாகனத்தை இயக்குவது அமைகிறது. 

இதனால் புத்தாண்டு இரவில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் இயக்கினால், அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பொதுமக்கள் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில் பிரச்சனை இல்லை. மதுபோதையில் வாகனம் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது. 

Assam

வாகனத்தில் பயணம் செய்பவர்களில் ஒருவர் மதுபானம் அருந்தியிருந்தாலும் அவர்களும் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். மறுநாள் பொழுது விடியும் வரை அரசின் விருந்தினராக கட்டுப்பாட்டில் இருப்பார்கள். போதையில் தள்ளப்படும் நிலையில் இருப்பவர்களை வீட்டிற்கே கொண்டு சென்று விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மதுபோதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் யாரேனும் இருந்தால் 98546 84760 மற்றும் 99547 58961 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், அவர்களை வீட்டிற்கு கொண்டு சென்று விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.