#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#GoodNews: கண்பார்வையற்றோருக்காக சென்சார் ஷூ.. 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சாதனை..!
பார்வையற்ற நபர்கள் பயணிக்கும் போது, அவர்களுக்கு ஏற்படும் தடையை கண்டறிய சென்சார் ஷூவை உருவாக்கி 9 ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கஞ்ச் நகரை சேர்ந்தவர் அன்குரித் கர்மாகர் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதலாகவே இருந்ததால், அதற்கேற்ப தற்போதே பல விஷயங்களை கண்டறிந்து வருகிறார்.
இந்நிலையில், மாணவர் அன்குரித் கர்மாகர் பார்வையற்றோருக்கான சென்சார் வசதிகொண்ட ஸ்மார்ட் ஷூவினை வடிவமைத்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக மாணவர் அன்குரித் கர்மாகர் தெரிவிக்கையில், "பார்வையற்ற நபர்களுக்காக ஸ்மார்ட் ஷூ உருவாக்கி இருக்கிறேன்.
எனது நோக்கம் விஞ்ஞானி ஆவது தான். நான் விஞ்ஞானியானதும் மக்களுக்கு உதவக்கூடிய மற்றும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் பல்வேறு பணிகளை செய்வேன். அதற்கான பொருட்களை கண்டறிவேன். தற்போது, பார்வையற்ற நபர்களுக்காக சென்சார் ஷூ கண்டுபிடித்துள்ளேன்.
இந்த சென்சார் ஷூ மூலமாக பார்வையற்ற நபர்கள் பயணிக்கும் போது, அவர்களின் வழியில் தடை ஏற்பட்டால், சென்சார் அதனை கண்டறிந்து எச்சரிக்கை கொடுக்கும். இந்த எச்சரிக்கையை கேட்கும் பார்வையற்றவர், அதற்கேற்ப தனது தடையை தவிர்க்க செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.