அச்சச்சோ... அத முதல்லயே சொல்லமாட்டியா தம்பி.! தடுப்பூசி போட்ட பிறகு இளைஞர் சொன்ன வார்த்தை.! பதறிப்போன மருத்துவர்கள்.!



at a time 2 dose vaccine

தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியில் உள்ள கோடலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். 19 வயது நிரம்பிய இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்தநிலையில், அவர் வசிக்கும் பகுதியின் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அருண் ஊசி போட உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார். 

பின்னர் அங்கிருந்த சுகாதார ஊழியர்கள் அவருக்கு தடுப்பூசி போட்டனர். இதையடுத்து சுகாதார ஊழியர்கள் அருணிடம் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து  தடுப்பூசி போடப்படும் அறையிலேயே அருண் சிறிது நேரம் அமர்ந்து இருந்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து செவிலியர் ஒருவர், அருணை அழைத்து தடுப்பூசி போடத் தான் காத்திருக்கிறார் என நினைத்து இரண்டாவதாக ஊசி போட்டுள்ளார்.

ஊசி போட்டு முடித்த பிறகு அருண் அந்த செவிலியரிடம் ஏற்கெனவே எனக்கு ஒரு தடுப்பூசி போட்டு விட்டனர். இது இரண்டாவது டோஸ் ஊசியா? என கேட்டுள்ளார். அப்போது தான் தவறை உணர்ந்த சுகாதாரத் துறையினர், மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அருண் முக கவசம் அணிந்திருந்ததால் இந்த குழப்பம் நடந்ததாகவும், அவர் சரியான செல்போன் போன் எண்ணை கொடுக்கவில்லை என்றும் சுகாதார ஊழியர்கள் கூறினர். இந்தநிலையில் அவரது உடல் நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.