மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மும்பை விமான நிலையத்தில் நூதன முறையில்; 47 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தியவர்கள் கைது..!.
மும்பை விமான நிலையத்தில் சுமார் 47 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை, இரண்டு பேரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் இரு வேறு போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. முதலாவதாக தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர், ஹெராயின் போதைப்பொருளை ஆவண கோப்புகளில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 4.47 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.31.29 கோடியாகும்.
அடுத்ததாக, எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில்லிருந்து வந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனையிட்ட போது, அவர் வைத்திருந்த உடைகளில் பட்டன்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அவற்றை சோதனை செய்து பார்த்தனர்.
அந்த பட்டன்களில், 1.596 கிலோ கொக்கெயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15.96 கோடி ஆகும். போதை பொருள் கடத்திய இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.