மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா!! புத்தாண்டில் 3.5 லட்சம் பிரியாணி டெலிவரி.. அசத்திய ஸ்விகி..!
ஸ்விகி இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி உணவு விநியோக தளமாகும். இன்றைய காலகட்டத்தில் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து உட்கொள்ளும் முறை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த வகையில் ஸ்விகி நிறுவனமானது புத்தாண்டில் மூன்றரை லட்சம் பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் பிரியாணிக்கு 76.4% ஆர்டர்கள் வந்ததாகவும், ஸ்விகி இன்ஸ்டா மார்ட் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் சிப்ஸ் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் 25 லட்சத்திற்கும் அதிகமான பீட்சா ஆர்டர்கள் பெரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புத்தாண்டில் 12 ஆயிரத்து 344 பேர் கிச்சடி ஆர்டர் செய்துள்ள சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது.