மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்ம மாஸ்.. நடிகை ரோஜாவுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்.! இவ்வளவு சீக்கிரமா...?
ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்த 2½ ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி 24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கினர். இந்த நிலையில் நகரி தொகுதி எம்.எ.ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு என்ன இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது என்று இன்று மாலை தெரியவரும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லையென அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், புதிய அமைச்சர்கள் பட்டியலில் ரோஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதையடுத்து இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.