மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த கொடூரம்!! 8 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்..!
ஜார்கண்ட் மாநிலத்தில் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் எட்டு வயது மாணவியை தலைமை ஆசிரியர் அடிக்கடி புதறுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெண் தலைமையாசிரியரை பிடித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் படி பள்ளிக்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது