மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே உஷார்.! மலிவு விலையில் போலி இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பனை.!
உணவிற்கு சுவையூட்டுவதற்கும், ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கும் நாம் அன்றாட உணவில் இஞ்சி மற்றும் பூண்டு போன்றவற்றை சேர்ப்பது உண்டு. சௌகரியம் கருதியும் இன்று இஞ்சி மற்றும் பூண்டின் விலை அதிகமாக இருப்பதாலும், 5 ரூபாய்க்கு விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்டை வாங்கி பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் போலியாக தயாரிக்கப்பட்டு வருவதாக ஹைதராபாத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்த சோதனையில், தெலுங்கானாவின் பல பகுதியில் இந்தக் போலி இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தீவிர சோதனையை மேற்கொண்டு, ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் ஆலையில் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவுகள் அவர்களுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு, இஞ்சி மற்றும் பூண்டிற்கு பதிலாக அழுகிய பூண்டுகள், சோடியம் பென்சொயேட் ரசாயனம், கம் பவுடர் மற்றும் ரசாயன வண்ண பவுடர்களை பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு தயாரிக்கப்பட்ட 3500 கிலோவுக்கும் மேற்பட்ட இஞ்சி பூண்டு கலவையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தெலுங்கானாவின் பிரபல நிறுவனங்களான ரோஷன் மற்றும் மாஸ் டைமண்ட் ஆகியவற்றின் பெயர்களில் இதனை விற்று வந்தது தெரிய வந்தது.
இதனை தயாரித்து வந்த முகமது என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த பாண்டுரங்க ராவ், ரஹீம், அஜய்குமார், அஹர் ஆகிய நால்வரும் ஐதராபாத்தில் போலியான இஞ்சி பூண்டு கலவை தயாரித்து விற்றதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை விழிப்புடன் இருப்பதற்கும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.