இந்த வயசுலயும் இப்படியா? படிப்பில் கலக்கிய பலே பாட்டிகளுக்கு கிடைக்கும் மாபெரும் கவுரவம்! குவியும் வாழ்த்துக்கள்!
கேரளாவில் வசித்து வருபவர் பாகீரதி அம்மாள். 105 வயது நிறைந்த மூதாட்டியான இவர் பள்ளிப்படிப்பை 10 வயதிலேயே பாதியில் நிறுத்தியுள்ளார். ஆனாலும் படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் தற்போது மீண்டும் படிப்பை தொடங்கி 4ம் வகுப்பு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். மேலும் இதன்மூலம் கேரள மாநில எழுத்தறிவு மிஷனின் வகுப்புகளில் அதிக வயதில் தேர்ச்சி பெற்றவர் என்னும் பெருமையையும் பெற்றார்.
அதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி 23ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த மூதாட்டியின் படிப்பு ஆர்வத்தை பாராட்டியுள்ளார். மேலும் அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு மனதார மரியாதை செலுத்துகிறேன் எனவும் கூறியிருந்தார்.
அவரை போலவே கேரளாவை சேர்ந்த கார்த்தியானி அம்மாள் என்ற 96 வயது மூதாட்டி 2018ம் ஆண்டில் எழுதிய தேர்வில் 100க்கு 98 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்த்தினார்.
இந்நிலையில் படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த இரு மூதாட்டிகளும் மார்ச் 8 ம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நரி சக்தி புராஸ்கர் 2019 என்ற விருதினை இருவரும் ஒன்றாக இணைந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பெறவுள்ளனர்.